ADDED : ஜூன் 24, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்ததால் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, பூலாங்குடி, பிச்சனார்கோட்டை, நெடும்புளிக்கோட்டை, இருதயபுரம், மங்கலம், அத்தானுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த மழை இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விளை நிலங்களில் மழையால் போதிய ஈரப்பதம் நிலவுவதால் கோடை உழவுக்கு ஏற்றதாக அமைவதுடன், ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.