/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காலை இரவு டிபனில் பிளாஸ்டிக் தாள்கள் அதிகளவில் பயன்பாடு
/
காலை இரவு டிபனில் பிளாஸ்டிக் தாள்கள் அதிகளவில் பயன்பாடு
காலை இரவு டிபனில் பிளாஸ்டிக் தாள்கள் அதிகளவில் பயன்பாடு
காலை இரவு டிபனில் பிளாஸ்டிக் தாள்கள் அதிகளவில் பயன்பாடு
ADDED : ஆக 16, 2024 03:57 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஓட்டல்களில் அதிகளவு பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்துகின்றனர்.
பிளேட்டின் மீது பிளாஸ்டிக் தாளை விரித்து அவற்றின் மீது உணவு பதார்த்தங்களை வைத்து பரிமாறுகின்றனர். இது குறித்து ஓட்டல் உரிமையாளர்களிடம் கேட்டால் இதை வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள் என கூலாக கூறுகின்றனர்.
வாழை இலைகளை பயன்படுத்துங்கள். அதற்கும் சேர்த்து தானே கட்டணம் வாங்குகிறீர்கள் என வாடிக்கையாளர்கள் கூறினாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத போக்கு தொடர்கிறது.
எனவே உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் தாள்களுக்கு பதில் வாழை இலை பயன்படுத்த உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
---