/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம்
/
'ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மே 16, 2024 06:25 AM

பரமக்குடி: பரமக்குடி வருவாய்துறை, போலீசார், மற்றும் போக்குவரத்து துறை சார்பில், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி 'ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர், டி.எஸ்.பி., சபரிநாதன் கொடி அசைத்து துவக்கினர். பாரதி நகர் பகுதியில் துவங்கிய ஊர்வலம் ஆற்றுப்பாலம், பெரிய பஜார், ஆர்ச், பஸ் ஸ்டாண்ட், ஐந்து முனை ரோடு வழியாக ஓட்ட பாலத்தை அடைந்தது.
அப்போது போலீசார், பொதுமக்கள் டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் சென்றனர்.
தாசில்தார் சாந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா, பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெயராமன் பங்கேற்றனர்.