ADDED : ஜூன் 27, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரபுவழி தோல் அலர்ஜி மிகவும் அரிப்பை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். குழந்தை முதல் பெரியவர் வரை இவ்வகையான அலர்ஜி நோய் வரும். நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பாடுகளால் ஏற்படும் மாற்றங்கள் மன அழுத்தம், சுற்றுப்புற சூழ்நிலைகளில் உள்ள துாண்டுதல் காரணமாகவும் வரலாம்.
உணவு, செயற்கை நிறமிகள், மீன், முட்டை, துாசி, மகரந்தம், கம்பளி ஆடைகள் ஆகியவை அலர்ஜியை அதிகப்படுத்தும். இணை நோய்களாக தோலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவை வரலாம். இவ்வகை நோய் அலர்ஜி மிகவும் அரிப்பை ஏற்படுத்தும்.
தகுந்த பருத்தி ஆடைகள்,துாசியைத் தவிர்த்தல், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்தல் ஆகியவைஅலர்ஜியை கட்டுப்படுத்தும். மேலும் தகுந்த நிபுணரிடம் தோல் சிகிச்சை பெற்று கொள்வது சிறந்தது.
- டாக்டர் சுபாகோபிராமநாதபுரம்97151 52767