ADDED : மே 20, 2026 06:01 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் நீதிமன்றம் அருகே அமைக்கப்பட்ட புறவழிச்சாலை ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் ரோடு இருளில் மூழ்கியதால் விபத்து அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே இருந்து செல்வநாயகபுரம் விலக்கு ரோடு வரையும், முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து நீதிமன்றம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.
இங்கு அசம்பாவிதம் ஏற்படம் அபாய நிலையில் புறவழிச்சாலை ரவுண்டானாவில் 4 இடத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்தனர். கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக மின்விளக்கு எரியாமல் இருந்த நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக உயர்கோபுர மின்விளக்கு எரிந்தது. தற்போது முதுகுளத்துார் நீதிமன்றம் அருகே அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
––
