தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உயர்கல்வி வழி காட்டுதல்  நிகழ்ச்சி

உயர்கல்வி வழி காட்டுதல்  நிகழ்ச்சி

உயர்கல்வி வழி காட்டுதல்  நிகழ்ச்சி


ADDED : ஜூன் 24, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில்  உயர்கல்வி வழிகாட்டுதல், விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது.

கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து பேசுகையில், உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள்  தங்களுக்கு உண்டான ஆர்வத்தையும், கற்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.  பிளஸ் 2 வகுப்பில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பரிசு தொகைக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். 

மாணவிகளுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தேன்மொழி, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, கூடுதல் எஸ்.பி., சுந்தரராஜ்,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) மார்த்தாண்ட பூபதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்  விசுபாவதி, பெண்கள் நலன் மகப்பேறு மருத்துவர் ராசிகா பங்கேற்றனர்.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us