/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரத்தில் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்
/
எமனேஸ்வரத்தில் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்
ADDED : மே 03, 2024 05:12 AM
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சமூக நலச் சங்கம் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
சமூக நலச் சங்கத் தலைவர் கெங்காதரன் தலைமை விதித்தார். சங்க பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்றார். தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் சங்க மாநிலத் தலைவர் ஜெயகண்ணன் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் பேராசிரியர்கள் நாகநாதன், கோவிந்தராமன், ஆசிரியர்கள் கேசவன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர். பிளஸ் -2 முடித்த பின்பு என்ன படிக்கலாம். கட் ஆப் குறைவாக கிடைத்தால் நினைத்த படிப்புகள் படிக்க முடியுமா. கல்லுாரிகளை எவ்வாறு தேர்வு செய்வது, கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு, கல்லுாரியில் ஒரிஜினல் சான்றிதழ் கொடுக்கலாமா என்பது குறித்து விரிவாகப் பேசினர்.
ஏராளமான மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.