/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அகதிகள் முகாம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
/
அகதிகள் முகாம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
அகதிகள் முகாம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
அகதிகள் முகாம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : மே 30, 2024 10:13 PM
ராமநாதபுரம், - மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்தார். கணொளி வழியாக தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் குழுமத்தின் உறுப்பினர் செயலர் சுதன் துவக்கி வைத்து நோக்கம் குறித்து பேசினார். செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர் ரவி வரவேற்றார்.
ராமநாதபுரம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டுதல் நடந்தது. உயர் கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர்கள் தவராம்குமார், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், ஆலோசகர்கள் அம்பேத் ஆறுமுகம் ஆகியோர் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினர்.
மண்டபம் மறுவாழ்வு முகாம் தனித்துணை கலெக்டர் (பொ) தனலட்சுமி, மண்டபம் முகாம் துணை தாசில்தார் கலாதேவி, மண்டபம் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். தமிழாசிரியர் பாலமுரளி நன்றி கூறினார்.