/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனுமதியின்றி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 110 பேர் கைது
/
அனுமதியின்றி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 110 பேர் கைது
அனுமதியின்றி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 110 பேர் கைது
அனுமதியின்றி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 110 பேர் கைது
ADDED : ஜூலை 22, 2024 04:46 AM

ராமநாதபுரம்: -ஹிந்து கோயில்களை விட்டு அரசு வெளியேற வலியுறுத்தி அனுமதி இன்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஹிந்து கோயில்களை விட்டு அரசு வெளியேற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் இடிந்து சிதிலமடைந்துள்ளது. கோயில்களில் ஒரு கால பூஜை நடக்கவில்லை.
தரிசனம், அர்ச்சனை, மொட்டை, காதுகுத்து, விளக்கு பூஜை போன்றவற்றிற்கு கட்டணம் வசூலித்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இது போன்றவைகளால் கோயில்களை தமிழக அரசு சீரழித்து வருகிறது என்றனர். ராமநாதபுரம் நகர் தலைவர் பாலா, நகர் பொது செயலாளர் ஆதி பிரபு பங்கேற்றனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் ரெகுநாதபுரம் பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையிலான 23பேர் மற்றும் சாயல்குடி, மண்டபம், உச்சிப்புளி, முதுகுளத்துார், பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் என 110 பேரை போலீசார் கைது செய்தனர்.