/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட சர்ச்களில் புனித குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
/
ராமநாதபுரம் மாவட்ட சர்ச்களில் புனித குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்ட சர்ச்களில் புனித குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்ட சர்ச்களில் புனித குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
ADDED : மார் 25, 2024 05:58 AM

ராமநாதபுரம், புனித குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸதவ தேவாலயங்களில் குருத்தோலை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் நேற்று காலை குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. முன்னதாக திருப்பலியை மதுரை கருமாத்துார் பாதிரியார்கள் சூசை மாணிக்கம், சின்னப்பன் தலைமையில் நடத்தினர். ராமநாதபுரம் பாதிரியார் சிங்கராயர், உதவி பாதிரியார் ரீகன் ஏற்பாடுகளை செய்தனர்.
குருத்தோலை பவனி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கியது. அப்போது பார்வை குறைபாடுள்ள மோட்ச பிரகாசம், கிறிஸ்து ராணி ஆகியோர் சிறப்பு திருப்பலி பைபிள் வாசித்தனர். அவர்களை பலர் பாராட்டினர்.ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
* பரமக்குடி உலகநாதபுரம் அற்புத குழந்தை இயேசு சர்ச் மற்றும் அலங்கார மாதா அன்னை சர்ச்சுகளில் குருத்தோலை பவனி நடந்தது. இயேசுவின் பாடுகளையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பர். இதன்படி நேற்று புனித வாரத்தின் துவக்க நாளாக குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியை நடந்தது.
உலகநாதபுரம் அற்புத குழந்தை ஏசு சர்ச்சில் பங்கு பணியாளர் ஞானதாசன் தலைமையில் ஏராளமானோர் குருத்தோலைகளை ஏந்தி வந்தனர். தொடர்ந்து சர்ச் வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இதில் அருள்பணியாளர்கள் சுவக்கின், மற்றும் கிரிதரன் உட்பட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
* அதே போல் ஐந்து முனை அருகில் உள்ள அலங்கார மாதா அன்னை சர்ச்சில் பங்கு பணியாளர் ஆரோக்கியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
* திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர், தொண்டி அருகே காரங்காடு ஜெபமாலை அன்னை மற்றும் பல சர்ச்சுகளில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பாதிரியார் தலைமையில் திருப்பலி நடந்தது.

