ADDED : மார் 28, 2024 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் நேற்று புனித வியாழனை முன்னிட்டு பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் பிப்.14 முதல் கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கிறது. கடந்த ஞாயிறு அன்று குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று புனித வியாழனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகளுடன் இயேசு கிறிஸ்துவின் சீடர்களால் நினைத்து மக்களின் பாதங்களை பாதிரியார் சிங்கராயர் கழுவினார். உதவி பாதிரியார் ரீகன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று (மார்ச் 29) புனித வெள்ளியை முன்னிட்டு மாலை 5:30மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

