/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகம்
/
சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகம்
சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகம்
சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகம்
ADDED : பிப் 22, 2025 06:47 AM

கடலாடி: கடலாடி யூனியன் அலுவலகம் அருகே கடலாடிசட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலகம் செயல்படுகிறது. 2001ல் கட்டப்பட்ட அப்போதைய எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பல்வேறு கட்டடங்களின் பூச்சுக்கள்பெயர்ந்து உதிர்ந்து விழுகிறது.
சமீபத்தில் பெய்த மழையால் மழை நீர் புகுந்து அலுவலகத்தின் சுவர்களில் வழிந்தோடியது. இதனால் அலுவலர்கள் சிரமத்தை சந்தித்தனர்.
கடலாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயன்படும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மிளகாய் நாற்று மற்றும் தோட்டக்கலை துறை வழங்கக்கூடிய மானியங்கள் பெறுவதற்காக விவசாயிகள் வருகின்றனர்.
இங்கு ஐந்து அலுவலர்கள் பணிபுரிகின்றனர். விவசாயிகள் கூறியதாவது:
சேதமடைந்த கட்டடத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலகம் இயங்குகிறது. இதேபோல கடலாடிவேளாண் துறை அலுவலகம் சேதமடைந்த கட்டடத்தில் இயங்குகிறது.
எனவே தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து கடலாடியில் வேளாண் துறை அலுவலகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.