/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காலமுறை ஊதியம் அரசு வழங்க வேண்டும் விடுதி துாய்மைப்பணியாளர்கள் கோரிக்கை

ADDED : மார் 04, 2025 06:31 AM

ராமநாதபுரம்: காலமுறை ஊதியம் வழங்கி, பணிவரன்முறை செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படை பணியை ரத்துசெய்ய வேண்டும் என அரசு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுதி களில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுதி, அனைத்துவிடுதி பணிபுரியும் துாய்மைப்பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில், 2013ல் வேலைவாய்ப்பு அலவலகம் மூலம் ரூ.4200 சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்படுகிறோம்.
2023 ஆண்டு தொகுப்பூதிய பணியாளர்கள் 26 பேர் உள்ளனர். சீர்மரபினர் விடுதியில் பணிபுரியும் நபர்களுக்கு 7 மாதமாக ஊதிய வழங்கவில்லை அதை உடன் வழங்கிட வேண்டும். காண்ட்ராக்டர் மூலம் துாய்மை பணியாளர்கள் நியமனமுறையை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே தொகுப்பூதிய
பணியாளர்கள் பணியை ரத்து செய்துள்ளதால் அவர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே காலமுறை ஊதியம் வழங்கி, பணிவரன்முறை செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படை பணியை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்திள்ளனர்.