/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபத்தில் சூறாவளி; சுற்றுலா படகிற்கு தடை
/
மண்டபத்தில் சூறாவளி; சுற்றுலா படகிற்கு தடை
ADDED : செப் 04, 2024 01:46 AM

ராமேஸ்வரம் : சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் சுற்றுலாப் படகு சவாரிக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
மண்டபம் தோனித்துறை கடற்கரையில் வனத்துறையின் சுற்றுலா படகு சவாரி நிலையம் உள்ளது.
இங்கிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகுகளில் மன்னார் வளைகுடா தீவு அருகிலும், பாம்பன் பாலத்தையும் கண்டு ரசிக்கின்றனர்.
நேற்று தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து மன்னார் வளைவுடா கடல் பகுதியில் சூறாவளியாக வீசியது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இச்சூழலில் சுற்றுலா சவாரி சென்றால் விபரீதம் ஏற்படும் என்பதால் நேற்று படகு சவாரிக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
மேலும் இங்குள்ள நிழல் பந்தல் சூறாவளியில் சிக்கி சேதமடைந்தது.
காற்றின் வேகம் தணிந்து கடலில் அலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதும் மீண்டும் சுற்றுலா படகு சவாரி துவக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.