தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தபால் ஊழியரை தாக்கிய கணவர்

தபால் ஊழியரை தாக்கிய கணவர்

தபால் ஊழியரை தாக்கிய கணவர்


ADDED : ஆக 06, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தபால் விநியோகம் செய்து கொண்டிருந்த மனைவியை கட்டையால் தாக்கிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.தொண்டி அருகே தினையத்துாரை சேர்ந்தவர் விஜயகுமாரி 33. இவர் தொண்டி அருகே நம்புதாளை தபால் அலுவலகத்தில் தபால்காரர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருவடிமதியூர் கிராமத்தை சேரந்த மகேந்திரன் 40,க்கும் 2015 ல் திருமணம் நடந்தது. இரு ஆண்டுகளாக கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகுமாரி நம்புதாளை பள்ளிவாசல் அருகே டூவீலரில் சென்று தபால் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மகேந்திரன் டூவீலரை மறித்து என்னுடன் சேர்ந்து வாழமாட்டாயா எனக் கூறி அருகிலிருந்த மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

விஜயகுமாரி புகாரில் தொண்டி போலீசார் மகேந்திரனை தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே இது போல் மனைவியை தாக்கிய வழக்கு நிலுவையில் உள்ளது.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us