/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத ஹைமாஸ் விளக்குகள்
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத ஹைமாஸ் விளக்குகள்
ADDED : ஏப் 18, 2024 05:23 AM

இருளில் தவிக்கும் பயணிகள்
பரமக்குடி: -பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் ஹை மாஸ் விளக்குகள் எரியவில்லை. இரவுநேரத்தில் இருட்டில்  பயணிகள் சிரமப்படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் தினமும் பல நூறு பஸ்கள் வந்து செல்கின்றன. இதன்படி கிராமப்புறங்களில் இருந்து தினம் தினம் ஆயிரக்கணக்கில் மக்கள் அன்றாட பணிக்கு வருகின்றனர்.  இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் போதிய மின்விளக்கு வசதியின்றி உள்ளது.
மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் கடந்த ஆண்டுகளில் ஹை மாஸ் பொருத்தப்பட்டது. இங்கு தற்போது ஐந்து விளக்குகள் இருந்த சூழலில் ஒன்று மட்டுமே எரிகிறது.  மூன்று விளக்குகள் காணாமல் போய் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் மதுரை செல்லும் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆகவே போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

