/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தேன்; மனைவி வாக்குமூலம்
/
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தேன்; மனைவி வாக்குமூலம்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தேன்; மனைவி வாக்குமூலம்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தேன்; மனைவி வாக்குமூலம்
ADDED : ஏப் 23, 2024 11:15 PM
திருவாடானை : கள்ளக்காதலுக்கு இடையூறாகவும், மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் கணவரை கொலை செய்தேன் என்று மனைவி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
திருவாடானை அருகே கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் 42. இவரது மனைவி ஆர்த்தி 35. இவரது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவர் ஸ்ரீகாந்தை கூலிப்படையை ஏவி கொலை செய்தார்.
திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையிலான போலீசார் ஆர்த்தி, கள்ளக்காதலன் இளையராஜா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
ஆர்த்தி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
எனது சொந்த ஊர் பட்டுகோட்டை அருகே ஆண்டிக்காடு. தாய், தந்தை இறந்துவிட்டனர்.
இரு சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளனர். ஸ்ரீகாந்த் அக்கிராமத்தில் காய்கறிகடை வைத்திருந்தார். நான் டெய்லர் வேலை பார்த்தேன். ஸ்ரீகாந்த் கடை வழியாக அடிக்கடி சென்ற போது காதல் ஏற்பட்டது.
குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி இருவரும் கோவைக்கு சென்று பல்லடத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். இரு மகன்கள் உள்ளனர். ஆண்டிக்காடில் பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்த எனது பங்காக ரூ.29 லட்சம் கிடைத்தது.
அப்பணத்தை வைத்து கொடுங்குளத்தில் வீடு கட்ட முடிவு செய்தோம். அப்போது இளையராஜா அறிமுகமானார். அவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தேன். இதை ஸ்ரீகாந்த் கண்டித்தார்.
மேலும் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு அடித்து துன்புறுத்தினார்.
இதனால் கணவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இளையராஜாவிடம் ஆலோசனை செய்து கூலிப்படையை வைத்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளார்.

