/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் பாதுகாப்புபணியில் 3000 போலீசார்: விதிகளை மீறினால் வழக்கு: எஸ்.பி., எச்சரிக்கை

UPDATED : ஏப் 19, 2024 06:47 AM
ADDED : ஏப் 19, 2024 05:10 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்காளர்கள் பயமின்றி ஓட்டளிக்கலாம். தேர்தல் விதிகளை மீறினால் வழக்குபதிவு செய்யப்படும் என எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் போலீசார்700 பேரும், ஊர்காவல்படையை சோர்ந்த 350 பேர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 200 பேர், மத்திய தொழில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 250பேர், தமிழ்நாடு ஸ்பெஷல் போலீசார் 200 பேர் என 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 800 ஓட்டுப்பதிவு மையங்களில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 13 ஆயிரத்து 700 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.இதில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் என 217 என அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு மத்தியபாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கலாம். ஓட்டுப்பதிவு மையங்களில் தேர்தல்விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். விதிகளை மீறினால் வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.