/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெயிலால் உடல் சோர்வடைந்தால் ஓ.ஆர்.எஸ்., கரைசல் அருந்துங்கள் சுகாதாரத்துறை அறிவுரை
/
வெயிலால் உடல் சோர்வடைந்தால் ஓ.ஆர்.எஸ்., கரைசல் அருந்துங்கள் சுகாதாரத்துறை அறிவுரை
வெயிலால் உடல் சோர்வடைந்தால் ஓ.ஆர்.எஸ்., கரைசல் அருந்துங்கள் சுகாதாரத்துறை அறிவுரை
வெயிலால் உடல் சோர்வடைந்தால் ஓ.ஆர்.எஸ்., கரைசல் அருந்துங்கள் சுகாதாரத்துறை அறிவுரை
ADDED : மே 03, 2024 05:12 AM
திருவாடானை: சுட்டெரிக்கும் வெயிலால் வரும் மயக்கம், உடல் சோர்வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வினியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கி பயன்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருவாடானை தாலுகாவில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் விளையாடுவதில் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர்.
வெயில் நேரத்தில் வெளியே செல்பவர்களுக்கு உடலில் தேவையான ஆற்றல் இல்லாமல் மயக்கம், சோர்வு ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ்., வழங்கபடுகிறது.
திருவாடானை தாலுகாவில் மங்களக்குடி, வெள்ளையபுரம், பாண்டுகுடி, திருவெற்றியூர், வெள்ளையபுரம், எஸ்.பி.பட்டினம் ஆகிய ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 24 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. இங்கு ஓ.ஆர்.எஸ்., பவுடர் வினியோகிக்கப்படுகிறது.
வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கூறுகையில், கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலின் எலக்ட்ரோல் அளவை அதிகரிக்க ஓ.ஆர்.எஸ்., கரைசல் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு மக்கள் நேரடியாக சென்று கரைசலை அருந்திக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வெயில் காலத்தில் வெளியே செல்லும் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சோர்வு ஏற்படும் போது இக் கரைசலை அருந்தலாம். இது தவிர இளநீர், பழங்கள், அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது என்றார்.