/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'உச்சியில் பொட்டு வைத்தால் பசங்க பின்னால வர மாட்டாங்க':லியோனி மீண்டும் சர்ச்சை பேச்சு
/
'உச்சியில் பொட்டு வைத்தால் பசங்க பின்னால வர மாட்டாங்க':லியோனி மீண்டும் சர்ச்சை பேச்சு
'உச்சியில் பொட்டு வைத்தால் பசங்க பின்னால வர மாட்டாங்க':லியோனி மீண்டும் சர்ச்சை பேச்சு
'உச்சியில் பொட்டு வைத்தால் பசங்க பின்னால வர மாட்டாங்க':லியோனி மீண்டும் சர்ச்சை பேச்சு
ADDED : ஏப் 06, 2024 01:13 AM
பரமக்குடி:தி.மு.க., கூட்டணிக்கு வில்லங்கம் ஏற்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுபவர்களில் கடும் போட்டி நிலவுகிறது. அதில் பிரதான இடத்தை நோக்கி திண்டுக்கல் லியோனி முன்னேறி வருகிறார்.
நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் செய்யும்போது ஹிந்து கடவுள் பெயர்கள் குறித்து மிமிக்ரி செய்து கேவலமாக பேசினார். நேற்று ராமநாதபுரத்திலும் அதே போன்ற பேச்சை தொடர்ந்தார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி இண்டியா கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக பரமக்குடியில் லியோனி பேசியது:
ஒரே நாடு, ஒரே தேர்தல் மோடி கூறுகிறார். இது இந்தியாவில் நடக்க வாய்ப்பே இல்லை. தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைப்பேன், என கூறி நான்கு ஆண்டுகளாகியும் நடக்கவில்லை. போலித்தனமான வாக்குறுதிகளை மோடி கொடுக்கிறார்.
தேனியில் ரொட்டி விற்று வியாபாரமாகததால், ராமநாதபுரத்தில் வந்து பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம், ராமநாதபுரத்தில் பலாப்பழம் இருக்கும் அவர் இருப்பாரா.
ஆயிரம் ரூபாயை ஏன் பெண்களுக்கு கொடுக்கிறோம் தெரியுமா... ஆண்களுக்கு கொடுத்தால் அருகில் இருப்பவர், 'மாப்பிள்ளை ஆயிரம் ரூபாய்க்குமா அரிசி வாங்கப்போற... 250க்கு சரக்கு வாங்குவோம்... மீதிக்கு அரிசி வாங்குவோம் என்பார்... போதை ஏறியபின் 250, 250 ஆக மொத்த பணமும் காலியாகிவிடும். அதனால் தான் பெண்களுக்கு கொடுக்கிறோம்...
பெண்கள் உச்சி நெற்றியில் ஏன் பொட்டு வைக்கிறார்கள் தெரியுமா... ஒரு அம்மா கிட்ட ஏன் நெற்றியில பொட்டு வெக்கிறீங்கன்னு கேட்டேன்... தெரியாது... எல்லாரும் வைக்கிறாங்க.. நானும் வெக்கிறேன்னுட்டு போயிட்டாங்க...
ஏன் பொட்டு வெக்கிறாங்க தெரியுமா... பொட்டு வைக்காவிட்டால் வயசு பசங்க பின்னால சுத்துவாங்க... பொட்டு வெச்சா பின்னால வரமாட்டாங்க'... என பேசியவர் அது சிக்கலாகும் என உணர்ந்து பிறந்தவீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருப்பது போல் பொட்டு வைக்கின்றனர் என 'சமரசமாக' பேசினார்.

