/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோட்டார் வைத்து குடிநீர் திருடினால் நடவடிக்கை
/
மோட்டார் வைத்து குடிநீர் திருடினால் நடவடிக்கை
ADDED : மே 07, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாடானைஊராட்சி தலைவர் இலக்கியா எச்சரித்தார்.
அவர் கூறியதாவது:
திருவாடானை ஊராட்சியில் நான்கு தெருக்களுக்கும், சிநேகவல்லிபுரம், சமத்துவபுரம், எல்.கே.நகர், அண்ணாநகர், பண்ணவயல் பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் வீடுகளில் இணைப்பு பெற்றிருக்கும் சிலர் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி தோட்டங்களுக்கு பாய்ச்சுகின்றனர். இதனால் மற்ற வீடுகளுக்கு நீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.