/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் டூவீலர்கள் திருடிய இளையான்குடி வாலிபர் கைது
/
பரமக்குடியில் டூவீலர்கள் திருடிய இளையான்குடி வாலிபர் கைது
பரமக்குடியில் டூவீலர்கள் திருடிய இளையான்குடி வாலிபர் கைது
பரமக்குடியில் டூவீலர்கள் திருடிய இளையான்குடி வாலிபர் கைது
ADDED : ஜூலை 14, 2024 04:01 AM

பரமக்குடி, : -பரமக்குடியில் தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட இளையான்குடி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி வேளாளர் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 48. இவர் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜூலை 8ல் டூவீலரை நிறுத்தியிருந்தார்.
இந்த டூவீலர் திருடப்பட்டது. பரமக்குடி டவுன் போலீசார் விசாரித்தனர். இதில் டூவீலரை திருடிய இளையான்குடி சாலையூர் தமீம் அன்சாரி 25, கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்தப்படும் டூவீலர்களை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து மூன்று டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.