/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காஞ்சிரங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு சீறிப்பாய்ந்த காளைகள்
/
காஞ்சிரங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு சீறிப்பாய்ந்த காளைகள்
காஞ்சிரங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு சீறிப்பாய்ந்த காளைகள்
காஞ்சிரங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு சீறிப்பாய்ந்த காளைகள்
ADDED : ஆக 29, 2024 05:05 AM

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் 19ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடந்தது.
காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை கண்ணன் கோயில் விளையாட்டு திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. 14 காளைகள் பங்கேற்றன.
சிவகங்கை, சோழம்பட்டி, காஞ்சிரங்குடி, திருமயம், மணியங்குடி, சத்தியமங்கலம், காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து எட்டு அணிகள் பங்கேற்றன. ஒரு அணிக்கு 9 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 30 அடி நீளம் கொண்ட கயிற்றில் ஒரு பகுதி உரலில் கட்டி மண்ணில் புதைக்கப்பட்டது.
மற்றொரு முனை கயிறு காளையின் கழுத்தில் கட்டப்பட்டது. 20 நிமிடங்கள் மாடு பிடி வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அவற்றில் பிடிபட்ட மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா தலைமை வகித்தார். தி.மு.க., மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி முன்னிலை வகித்தார். நவாஸ் கனி எம்.பி., போட்டியை துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு வடமாடு எருதுகட்டு பேரவை தலைவர் கே.ஆதித்தன் வரவேற்றார்.
ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநில கவுரவ தலைவர் தங்கராஜ், பாலு, முனியசாமி, விவேக், வினோத் பங்கேற்றனர்.