/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் 112 அரசு பள்ளிகளில் புதிய மேலாண்மை குழு அமைக்க பணிகள் தீவிரம்
/
திருவாடானையில் 112 அரசு பள்ளிகளில் புதிய மேலாண்மை குழு அமைக்க பணிகள் தீவிரம்
திருவாடானையில் 112 அரசு பள்ளிகளில் புதிய மேலாண்மை குழு அமைக்க பணிகள் தீவிரம்
திருவாடானையில் 112 அரசு பள்ளிகளில் புதிய மேலாண்மை குழு அமைக்க பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 15, 2024 04:52 AM
திருவாடானை, : திருவாடானை தாலுகாவில் உள்ள 112 அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்களை கொண்ட பள்ளி மேலாண்மைக் குழு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதம் வெள்ளிக்கிழமை இக்குழு கூட்டம் நடக்கும்.
பள்ளியில் கற்றல், கற்பித்தல், மாணவர் சேர்க்கை, மேலாண்மை உள்ளிட்ட பணி தொடர்பாக விவாதிக்கப்படும்.
2022ல் மேலாண்மைக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஜூலையுடன் தற்போதுள்ள குழுவின் பதவிக்காலம் முடிகிறது.
இதனால் 2024-26ம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மை குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:
ஒரு குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராகவும், தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 24 பேர் குழுவில் இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் 79 அரசு தொடக்கப்பள்ளி, 19 நடுநிலைப்பள்ளி, 6 உயர்நிலைப்பள்ளி, 7 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய மேலாண்மை குழுக்கள் அமையும் வகையில் பணிகள் தீவிரமாக நடக்கிறது.