/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்க விழா
/
இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்க விழா
ADDED : ஜூலை 12, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஊராட்சி இந்திரா நகரில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்க விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். முன்னாள் உதவி திட்ட அலுவலர் கர்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சேதுபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வன்னிமுத்து, மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் லியோன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகவேல் நன்றி கூறினார். தன்னார்வலர் பாண்டியம்மாள் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினார்.