ADDED : ஆக 01, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதியில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. அரிமா முன்னாள் கவர்னர் ஜஸ்டின் பால் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து திட்டங்களை துவக்கி வைத்தார்.
தலைவராக டாக்டர் கன்னியப்பன், செயலாளர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் ரகுநாத் பதவி ஏற்றனர். மண்டல தலைவர் ஆல்பர்ட் ராஜா, மாவட்ட தொடர்பு அலுவலர் சிவமுருகன், வட்டார தலைவர் குருசாமி முன்னிலை வகித்தனர். கடந்த நிதியாண்டு தலைவர் பொன்ஜி வரவேற்றார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ரொக்கப் பரிசும், நடைபாதை வியாபாரிகளுக்கு அரிசி அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் சங்கத்தில் இணைக்கப்பட்டனர்.