ADDED : ஆக 23, 2024 03:46 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் மின்சிக்கன பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆற்றல் மன்றங்கள் துவங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் 50 அரசு மேல்நிலை,உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் ஆற்றல் மன்ற துவக்க விழா ஆக.,20ல் நடந்தது. ராமநாதபுரம் மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் செயற் பொறியாளர் பட்டுராஜா, மின்சார வாரியத்தின் தொலை தொடர்பு அலுவலர் சாதனா பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலாளர் காந்தி வரவேற்றார். ஆற்றல் மன்றத்தின் முதன்மைக் கருத்தாளர் ஸ்டிபன் நாதன் மின் சிக்கனம், பாதுகாப்பு ஆற்றல் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆசிரியர்களிடையே கலந்துரையாடினார்.
சுற்றுச்சூழல் மன்றம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், அறிவியல் இயக்கம் மாவட்டத் தலைவர் லியோன் ஆற்றல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், அறிவியல் இயக்க நிர்வாகிகள் பரமேஸ்வரன், குணசேகரன் பங்கேற்றனர்.