/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுாரில் கவினா குளோபல் பள்ளி (ஐ.சி.எஸ்.இ.,) திறப்பு விழா
/
பார்த்திபனுாரில் கவினா குளோபல் பள்ளி (ஐ.சி.எஸ்.இ.,) திறப்பு விழா
பார்த்திபனுாரில் கவினா குளோபல் பள்ளி (ஐ.சி.எஸ்.இ.,) திறப்பு விழா
பார்த்திபனுாரில் கவினா குளோபல் பள்ளி (ஐ.சி.எஸ்.இ.,) திறப்பு விழா
ADDED : மே 13, 2024 12:27 AM

பரமக்குடி : மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே பார்த்திபனுார் இடையர்குடியிருப்பு கவினா குளோபல் புதிய பள்ளி(ஐ.சி.எஸ்.இ.,) திறப்பு விழா நடந்தது.
கவினா கல்வி குழுமத் தலைவர் கண்ணதாசன் பாண்டியன் தலைமை வகித்தார்.
தாளாளர் ஹேமலதா கண்ணதாசன் குத்துவிளக்கு ஏற்றினார். பாண்டியன் சரஸ்வதி யாதவ் குழும தாளாளர் வரதராஜன், பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் ஆகியோர் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் சோனைமீனாள் கல்லூரி தாளாளர் ரெங்கநாதன், பரமக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சேதுதினகரன், அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங், கவினா சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர் காஞ்சனா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் அருணா நன்றி கூறினார்.