/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாடகோட்டையில் முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா துவக்கம்
/
மாடகோட்டையில் முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா துவக்கம்
மாடகோட்டையில் முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா துவக்கம்
மாடகோட்டையில் முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா துவக்கம்
ADDED : மே 24, 2024 02:18 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடகோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன.
பின் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலம் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
கோயில் கொடி மரத்தில் காப்பு கட்டப்பட்டு கொடிமரம் மற்றும் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கொடி மரத்தில் காப்பு கட்டப்பட்தை தொடர்ந்து பக்தர்கள் தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.
விழாவின் தொடர்ச்சியாக மே 30ல் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து பூச்சொரிதல் விழாவும், மறுநாள் மே 31ல் முக்கிய விழாவான பூக்குழி விழா நடக்கிறது. கடைசி நாளில் விரதமிருந்த பக்தர்கள் காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவர்.
ஜூன் 1ல் கிடாவெட்டு விழாவுடன் கோயில் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட்டி கருப்பத்தேவர் செய்து வருகிறார்.