/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாத்தைய்யனார் கோயில் சித்திரை விழா துவக்கம்
/
சாத்தைய்யனார் கோயில் சித்திரை விழா துவக்கம்
ADDED : ஏப் 23, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுார் மகா சாத்தைய்யனார் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக மூலவருக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு காப்பு கட்டுதல் நடைபெற்றது.
விழாவின் தொடர்ச்சியாக ஏப்.25ல் கோயிலில்இருந்து வடம் எடுத்தல் நிகழ்வும், மறுநாள் தங்கு வடம் நிகழ்வும், நடக்கின்றன. தொடர்ந்து முக்கிய விழாவான எருதுகட்டு விழா மற்றும் பூக்குழி விழா ஏப்.27ல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை சாத்தனுார் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

