/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கம்; நான் முதல்வன் திட்டத்தில் 124 பேருக்கு பணி ஆணை

ADDED : ஆக 09, 2024 10:42 PM

பரமக்குடி: பரமக்குடி அரசு கலை கல்லுாரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்க விழா மற்றும் நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கோவையிலிருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 352 மாணவர்கள் பயனடைந்தனர். இவர்களுக்கு பரமக்குடி சின்னகடை கிளை ஆர்.டி.சி.சி., வங்கி மேலாளர் சரவணன் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்காக ஏ.டி.எம்., கார்டுகளை வழங்கினார்.
தொடர்ந்து இக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 12 நிறுவனங்கள் பங்கேற்றன. 244 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிறுவனங்கள் 124 மாணவர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணைகளை வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஞானராஜ், கண்ணன் உட்பட அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் பிரசாத் தொகுத்து வழங்கினார்.