/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய அரசு சட்டக் கல்லுாரி திறப்பு விழா
/
புதிய அரசு சட்டக் கல்லுாரி திறப்பு விழா
ADDED : ஆக 12, 2024 11:50 PM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சியில் ரூ.76 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு சட்டக் கல்லுாரி திறப்பு விழா நேற்று நடந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதிய சட்டக் கல்லுாரியை காலை 11:20 மணிக்கு திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் வரவேற்றார்.
எம்.பி., நவாஸ் கனி, எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, ராமநாதபுரம் யூனியன் சேர்மன் பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் ரவிச் சந்திரன் ராமவன்னி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், பேராசிரியர்கள் ஜீவரத்தினம், விஜி பிரியா, முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய சட்டக் கல்லுாரியில் 3958 ச.மீ.,ல் தரைத்தளம், முதல் தளம் இரண்டாம் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் பத்து வகுப்பறை, முதல் தளத்தில் பத்து வகுப்பறை, இரண்டாம் தளத்தில் ஆறு வகுப்பறைகளும் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டு, குளிர்சாதன வசதியுடன் கலையரங்கம் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
நுாலகம், புத்தக வாசிப்பு அறைகள் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதி, காப்பாளர் அறை, சமையலறை கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இக்கல்லுாரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான சட்டக் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

