/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் வாரச்சந்தை திறப்பு விழா; ஏராளமானோர் பங்கேற்பு
/
ரெகுநாதபுரத்தில் வாரச்சந்தை திறப்பு விழா; ஏராளமானோர் பங்கேற்பு
ரெகுநாதபுரத்தில் வாரச்சந்தை திறப்பு விழா; ஏராளமானோர் பங்கேற்பு
ரெகுநாதபுரத்தில் வாரச்சந்தை திறப்பு விழா; ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : ஆக 04, 2024 06:06 AM

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஆடி 18ம் பெருக்கு நாளில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் புதிய வாரச்சந்தை துவக்க விழா நேற்று காலை நடந்தது.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா வாரச்சந்தையை திறந்து வைத்தார். ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் ஜெகத்ரட்சகன் வரவேற்றார்.
ஊராட்சிகளின் உதவி இயக்குனர் திருப்பதி ராஜன், திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, பி.டி.ஓ.,க்கள் ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், துணை தாசில்தார் அய்யாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், டாக்டர் பிரதீப்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று வாரச்சந்தை வர்த்தகத்தில் மும்முரமாக ஈடுபட்டனர்.