/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெயிலால் வெப்ப நோய்கள் அதிகரிப்பு
/
வெயிலால் வெப்ப நோய்கள் அதிகரிப்பு
ADDED : மார் 28, 2024 10:53 PM
திருவாடானை : அதிகளவு வெயில் தாக்கத்தால் வெப்ப நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருவாடானை, தொண்டி பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலால் உடல் வெப்பம் அதிகரித்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சைத் தொற்று, நீர்கடுப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு பலரும் ஆளாகிகின்றனர்.
திருவாடானை, தொண்டி அரசு மருத்துவமனைகளில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்காக செல்கின்றனர். டாக்டர்கள் கூறியதாவது:
தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது. அளவிற்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் உடல் சோர்வு ஏற்படும். இதற்கு வெயிலில் அலைவதை குறைத்து அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு வேளைக்கு ஏற்றாற் போல் சமைத்த உணவை உடனுக்குடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீராகாரங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது என்றனர்.

