/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் பகுதியில் மணல் திருட்டு அதிகரிப்பு
/
தேவிபட்டினம் பகுதியில் மணல் திருட்டு அதிகரிப்பு
ADDED : மே 02, 2024 05:03 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது மணல் திருட்டு அதிகரித்து வருவதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
தேவிபட்டினம், இலந்தைகூட்டம், சித்தார்கோட்டை, அம்மாரி, கோகிலவாடி, புதுவலசை, பழனி வலசை, பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பனை மற்றும் தென்னந் தோப்புகள் உள்ளன. தனியார் தோப்புகள் மட்டுமின்றி கடற்கரையோரங்களில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களிலும் ஏராளமான மணல் பாங்கான இடங்கள் உள்ளன.
தோப்புகள் மற்றும் பனை மரங்கள் அதிகம் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் உள்ள மணல்களை மணல் திருட்டு கும்பல் எளிதாக டிராக்டர்களில் அள்ளி விற்பனை செய்கின்றனர். அடர்ந்தபனங்காட்டு பகுதிஎன்பதால், இரவுமட்டுமின்றி பகல் நேரங்களிலும் மணல் திருட்டை கண்டுபிடிப்பது வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு சவாலாகவே உள்ளது.
இதனால் எளிதாக அப்பகுதியில் மணல் திருட்டு நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட போலீசாரும், வருவாய்த்துறையினரும் அப்பகுதியில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

