/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு ; கிலோ ரூ.40க்கு விற்பனை
/
சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு ; கிலோ ரூ.40க்கு விற்பனை
சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு ; கிலோ ரூ.40க்கு விற்பனை
சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு ; கிலோ ரூ.40க்கு விற்பனை
ADDED : ஏப் 23, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமாதபுரத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து சாத்துக்குடி பழம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.
ஆந்திராவில் அனந்தபூர், கடப்பா, நெல்லுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் சாத்துக்குடியை மொத்தமாக வாங்கி வந்து ராமநாதபுரத்தில் வியாபாரிகள் விற்கின்றனர்.
கடந்த மாதம் கிலோ ரூ.60க்கு விற்ற சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. கோடைகாலம் என்பதால் சாத்துக்குடி ஜூஸ் தயாரிக்க மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.