தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காற்றின் சுழற்சி அதிகரிப்பு வாகன ஓட்டிகள் சிரமம்

காற்றின் சுழற்சி அதிகரிப்பு வாகன ஓட்டிகள் சிரமம்

காற்றின் சுழற்சி அதிகரிப்பு வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஜூன் 08, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மாலை நேரங்களில் சுழன்று வீசும் காற்றின் வேகம் அதிகரிப்பால் டூவீலர் டிரைவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் காற்றின் சுழற்சி அதிகரித்து காற்று சுழன்று சுழன்று வீசுகிறது. இதனால் ஏற்படும் புழுதி புயலால் ரோட்டோரங்களில் உள்ள மணல் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள், காற்றில் கலந்து வரும் மண், துாசு உள்ளிட்ட மாசுகளால் பாதிப்படைகின்றனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் டவுன், ஆனந்துார், சோழந்துார் உள்ளிட்ட பகுதிகளிலும், கிழக்கு கடற்கரை சாலை உப்பூர் , திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பால் வர்த்தக நிறுவனங்களின் முகப்பு பகுதியில் உள்ள கூரைகள், வீடுகளின் கூரைகள் சேதமடைகின்றன. குறிப்பாக முக்கிய சாலைகளில், டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us