/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ--பைலிங் முறையை கண்டித்து காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு
/
இ--பைலிங் முறையை கண்டித்து காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு
இ--பைலிங் முறையை கண்டித்து காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு
இ--பைலிங் முறையை கண்டித்து காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : ஏப் 03, 2024 06:58 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இ-பைலிங் முறையை கண்டித்து காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பார் கவுன்சில் அலுவலகத்தில் நடந்தது. ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ேஷக் இப்ராஹிம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு, துணைத்தலைவர் மாதவன்.
பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தலைவர் சேதுபாண்டியன், செயலாளர் காமராஜ், திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் சிவராமன், செயலாளர் சவுந்திரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் தனபால், ராமேஸ்வரம் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மயில்சாமி, செயலாளர் ஹரிஹரன்.
முதுகுளத்துார் சங்கத்தின் தலைவர் ராஜசேகர், சந்திரசேகர், கடலாடி சங்கத்தலைவர் தலைவர் கோபால், செயலாளர் பூ முருகன், கமுதி சங்கத்தலைவர் ரமேஷ்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இ-பைலிங் முறையால் தேவையற்ற காலதாமதம், வழக்காளர் பாதிக்கப்படுகின்றனர்.
இ-பைலிங் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும்.
எந்த வழக்கறிஞரும் இ-பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்ய கூடாது. இ-பைலில் குறைபாடுகள் குறித்து தமிழகம், புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகம், புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

