தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சுதந்திர தின விழா..

சுதந்திர தின விழா..

சுதந்திர தின விழா..


ADDED : ஆக 17, 2024 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் வணிகவரி அலுவலகத்தில் வணிகவரி அலுவலர் பாலகுமுார் தேசியக்கொடி ஏற்றினார். ராமநாதபுரம் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் டீன் (பொ) டாக்டர் சுபிதா தேசியக்கொடி ஏற்றினார். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

தெளிசாத்தநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி கொடி ஏற்றினார். கவுன்சிலர் சேதுபதி, வார்டு உறுப்பினர்கள் காளிதாஸ், மாரிசெல்வம் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். ஆசிரியர்கள் ராணி, துர்காதேவி, முனீஸ்வரி, கவிதா, ரோசரி, சந்திரமேனகா, மகேஸ்வரி, அழகேஸ்வரி, பெற்றோர்பங்கேற்றனர்.

----திருவாடானை


திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் கணேசன், ஆரோக்கிய மேரிசாராள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அமர்நாத், டி.எஸ்.பி.அலவலகத்தில் டி.எஸ்.பி., நிரேஷ், ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் இலக்கியா, அரசு தொடக்கபள்ளியில் தலைமை ஆசிரியர் கதிரவன் கொடியேற்றினர்.

வெள்ளையபுரம் அனிஷ்பாத்திமா மழலையர் மற்றும் தொடக்கபள்ளியில் 78 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 78 மாணவர்கள் 78 எண் கொண்ட வடிவில் அமைத்திருந்தனர். திருவாடானை பரமஹம்ச வித்யாலயமா மழலையர் பள்ளியில் தாளாளர் கார்த்திகேயன் கொடியேற்றினார். தொண்டி உந்திபூத்தபெருமாள், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சமபந்தி விருந்து நடந்தது.

பரமக்குடி


பரமக்குடி சவுராஷ்டிரா நர்சரி அண்டு பிரைமரி பள்ளியில் தாளாளர் மணிகண்டன் தேசிய கொடி ஏற்றினார். உப தலைவர் ராமச்சந்திரன், டாக்டர் பானுகோபன், கல்வி குழு செயற்குழு உறுப்பினர் லெங்காராம் வாழ்த்தினர். தலைமை ஆசிரியை(பொ) கலைவாணி நன்றி கூறினார்.

பரமக்குடி அருகே போகலுார் பள்ளி கல்வி வட்டார வள மையம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் நிர்வாகி மாடசாமி கொடியேற்றினார். மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்து கொடி ஏற்றினார். சார்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலசுப்பிரமணியன், குற்றவியல் நீதிபதி பாண்டி மகாராஜா முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ் கலந்து கொண்டனர்.

பரமக்குடி சோமநாதபுரம் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் முத்தாலம்மன் கலை அறிவியல் பெண்கள் கல்லுாரியில் சேர்மன் முருகானந்தம் தலைமை வகித்தார். லயன் சங்க கவர்னர் ஜெகநாதன் மற்றும் திருவரங்கம் ஆதி காமாட்சி அம்மன் கோயில் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கொடி ஏற்றினார்.

சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மாரியப்பன் தேசிய கொடி ஏற்றினார். உதவியாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கடலாடி யூனியன் அலுவலகத்தில் முத்துலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். ஒன்றிய கவுன்சிலர் முனியசாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆத்தி வரவேற்றார். பி.டி.ஓ., ஜெய ஆனந்த், முரளிதரன் உட்பட யூனியன் அலுவலர்கள் பங்கேற்றனர். கடலாடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகேசன் கொடி ஏற்றினார்.

பெருநாழி சத்திரிய ஹிந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தேசியக் கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் இளமுருகன், ஆசிரியர் மாரிப்பாண்டியன், அம்பலம் போஸ் நாடார், இடைக்கால நிர்வாகக் குழு தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் பழனிகுமார், பள்ளி செயலாளர் மாரியப்பன், தலைவர் ஆனந்த், பொருளாளர் செல்லதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.

உச்சிநத்தம் ஸ்ரீ ஆறுமுக விலாஸ் ஹிந்து ஆரம்பப் பள்ளியில் பள்ளிச் செயலாளர் காசிமுத்து வீரபாண்டியன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் வரவேற்றார். உதவியாசிரியர் செல்வி நன்றி கூறினார்.

ரெகுநாதபுரம் நாகா மழலையர் துவக்கப்பள்ளியில் முன்னாள் ராணுவ வீரர் கோவிந்தன் கொடி ஏற்றினார். தாளாளர் வெண்மதி நாதன் வரவேற்றார். தேசத் தலைவர்களின் வேடமணிந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முதல்வர் வனிதா நன்றி கூறினார்.

உத்தரகோசமங்கை அருகே செய்யாலுார் போதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் ராணுவ வீரர் பழனிச்சாமி தேசியக்கொடி ஏற்றினார். தாளாளர் எம்.விஜயன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயந்தி வரவேற்றார்.

நரசிங்க கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் கொடி ஏற்றினார். மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us