/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுதந்திரன தின விழா கலை நிகழ்ச்சிகள்
/
சுதந்திரன தின விழா கலை நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 15, 2024 04:04 AM

ராமநாதபுரம் : -கலை பண்பாட்டுத்துறை சார்பில் சுதந்திரத்தின் பெருமை வாய்ந்த இடங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும் படை தாசில்தார் தமீம் ராஜா தலைமை வகித்தார். சமூக சேவகர் எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார்.