ADDED : செப் 09, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம் : பெரியபட்டினத்தில் இந்திய கம்யூ., கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், சுங்க கட்டண வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசினார்.
பெரியபட்டினத்தில் ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிற்சங்க கொடியின் கம்பம் மற்றும் தகவல் பலகை சேதப்படுத்திய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மாவட்ட குழு நிர்வாகிகள் லோகநாதன், தர்வேஷ் கான், பாலு, ராஜேந்திரன், அப்துல் இஷாக், ஆறுமுகம், மலைச்சாமி, மலையாண்டி பங்கேற்றனர்.