/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இந்தியன் ரத்ததான குழு ஆண்டு விழா
/
இந்தியன் ரத்ததான குழு ஆண்டு விழா
ADDED : ஆக 16, 2024 04:04 AM

4000 பேர் தானம்
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் இந்தியன் ரத்ததான குழு 7ம் ஆண்டு விழா நடந்தது. இங்கு 6 ஆண்டுகளில் 4000 பேர் ரத்த தானம் அளித்துள்ளனர்.
இந்தியன் ரத்ததான குழு செயலாளர் ஜெயந்திலால் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் ஆசிரியர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். டாக்டர் வெங்கடாசலபதி, மத்திய பல்கலை உதவி பேராசிரியர் வெங்கடாசலபதி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் டாக்டர் ஜெயச்சந்திரன், டாக்டர் கார்த்திகேயன், சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கேசவன் வாழ்த்தினர்.
தானம் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ரத்த தானத்தின் சிறப்புகள் குறித்து பேசினர். 2018ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் 4000 கொடையாளர்கள் ரத்தம் வழங்கி பல உயிர்களை காத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரத்ததானக் குழு நிர்வாகி சபரிபாலன் நன்றி கூறினார்.
---

