ADDED : ஜூலை 02, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுார் மகாசாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் நாளை(ஜூலை 3) நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று கணபதி ஹோம பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.
தொடர்ந்து கோ மாதா பூஜை நடந்தது. கோயிலின் முன்பு பசுவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்து பசுவை சுற்றி வந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின் வாஸ்து சாந்தி பூஜையும், அரசமர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
காலையில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நாளை காலை 10:00 முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.