ADDED : மே 05, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, மே 5--
கீழக்கரை புது கிழக்கு 21 குச்சி பகுதியில் சிறகுகள் முறிந்து காயமடைந்த நிலையில் ஒரு ஆண் மயில் பறக்க முடியாமல் சிரமப்பட்டு நின்றது.
இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அபூபக்கர் சித்தீக் மயிலை மீட்டார்.
கீழக்கரை வனச்சரக அலுவலர்களுக்கு அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் மயிலை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.