ADDED : மார் 08, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டிற்கான கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு பணி நிலை திறன் மேம்பாட்டு புத்தாக்கப்பயிற்சி, ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ராஜலட்சுமி முகாமை துவக்கி வைத்து பணியாளர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
துணைப்பதிவாளர்கள் ராமகிருஷ்ணன், பரமக்குடி ரத்தினவேல், மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் செயலாட்சியர் முரளி கிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் கிரிஜாகுமாரி, கூட்டுறவு மேலாண்மை நிலையம் முதல்வர் ரகுபதி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.