/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனையில் அதிகாரம் காட்டும் உணவு தரும் ஊழியர்கள் உள்நோயாளிகள் புலம்பல்

ADDED : மே 04, 2024 04:51 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில், இலவசஉணவு வழங்கும் பணியில் உள்ள ஊழியர்களில் சிலர் உள்நோயாளிகளிடம் அதிகாரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கண் சிகிச்சை வார்டு, அவசர சிகிச்சைவார்டு, ஆண், பெண், மகப்பேறு பிரசவ வார்டுகளில்உள் நோயாளிகளாக ஏராளமானவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தினமும் இலவசமாக காலை, மதியம், இரவு உணவு வழங்கப்படுகிறது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள சிலஊழியர்கள்சாப்பாடு வழங்கும் போது ஏதோ அவர்களதுசொந்த பணத்தில் வழங்குவது போல நோயாளிகளைதரக்குறைவாக விரட்டுகின்றனர். மேலும் வயது வித்தியாசம் பார்க்காமல்மரியாதை குறைவாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் உள் நேயாளாளிகள் மன உளைச்சலுக்குஆளாகின்றனர். எனவே தரமான உணவை உறுதி செய்து, நோயாளிகளிடம் கோபம் காட்டாமல், அவசரப்படுத்தாமல் அன்புடன் உணவு வழங்க வேண்டும்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் உணவுவழங்கும் பணியில் உள்ள ஊழியர்களிடம் விசாரணைசெய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்என நோயாளிகள் வலியுறுத்தினர்.