/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி மூத்த குடிமக்கள் வலியுறுத்தல்
/
ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி மூத்த குடிமக்கள் வலியுறுத்தல்
ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி மூத்த குடிமக்கள் வலியுறுத்தல்
ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி மூத்த குடிமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 08, 2024 04:29 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில்நிலையத்தல் எஸ்கலேட்டர், லிப்ட் அமைக்க வேண்டும் என மூத்த குடிமக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
கேரள வயநாடு நிலச்சரிவில் பலியானவர்கள், இறந்த கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டணச் சலுகை மீண்டும் வழங்க வேண்டும். 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு லோயர் பெர்த்து வழங்க வேண்டும்.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தல் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் அமைக்க வேண்டும்.
அரசு பஸ்களில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் சுகந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.