/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சம்பட்டி -பம்மனேந்தல் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்; பரமக்குடியில் விவசாயிகள் பிரசாரம்

ADDED : ஆக 08, 2024 10:44 PM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் செழிக்க கஞ்சம்பட்டி முதல் பம்மனேந்தல் கண்மாய் வரை கால்வாய்களை துார்வாரி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பரமக்குடியில் விவசாயிகள் பிரசாரம் செய்தனர்.
பரமக்குடி காந்தி சிலை முன்பு நடந்த கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். தேவநேரி முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டிசெல்வம் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்காக உருவாக்கப்பட்ட வைப்பாறு, கஞ்சம்பட்டி கால்வாய் திட்டத்தை விவசாயிகள் ஆலோசனைப்படி சீரமைக்க வேண்டும்.
இதன்படி கஞ்சப்பட்டி கண்மாய் கரைகளை சீரமைத்து கிழக்கு பகுதி ஷட்டர்களை முற்றிலும் அகற்றி பாரம்பரிய நீர் வழித்தடங்களை ஆய்வு செய்து மாவட்ட எல்லையான பம்மனேந்தல் கண்மாய் வரை துார் வரவேண்டும்.
வைகை அணையில் இருந்து உபரியாக கடலில்கலக்கும் தண்ணீரை அளவீடு செய்து பார்த்திபனுார்மதகணையிலிருந்து பரளை கால்வாய் வழியாக பாசனத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின் 2ம் மற்றும் 3ம் பகுதி திட்ட மதிப்பீட்டிற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயம் அந்துவான், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கமுதி குருசாமி, முதுகுளத்துார்முனியாண்டி, கருங்குளம் முனியசாமி, புத்துார் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.