/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வண்ணார்கள் சமுதாயத்தை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தல்
/
வண்ணார்கள் சமுதாயத்தை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தல்
வண்ணார்கள் சமுதாயத்தை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தல்
வண்ணார்கள் சமுதாயத்தை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தல்
ADDED : மார் 22, 2024 04:30 AM

ராமநாதபுரம்: -தமிழகத்தில் வண்ணார் சமுதாயத்தை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும், என அச்சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட சலவைத்தொழிலாளர்கள் பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனுவை பெட்டியில் போட்டனர்.
அதில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் வண்ணார் சமூகம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர். இந்த சமூகம் உயர்வதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி எண்ணிக்கைக்கு ஏற்பட இட ஒதுக்கீடு தர வேண்டும்.
1976 மத்திய அரசு கொண்டு வந்த பட்டியல் மற்றும் பழங்குடியினர் சட்ட திருத்தத்தின்படி மாநிலத்தில் ஒரு ஜாதி, ஒரு பகுதியில் பட்டியல் ஜாதியாக இருந்தால் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்திக்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் பட்டியல் ஜாதியாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வண்ணார் சமூகத்தினை பட்டியல் ஜாதியாக அறிவிக்க வேண்டும், என சலவைத்தொழிலாளர்கள் பேரவை ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் முத்து, பொருளாளர் ரமேஷ் வலியுறுத்தினர்.

