/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க வலியுறுத்தல்

ADDED : மே 04, 2024 05:09 AM

ராமநாதபுரம்,: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்கள் தங்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள சம்பளம் வழங்க வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) மாவட்டச் செயலாளர் சண்முகராஜன் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக துாய்மைப் பணியாளர்களாக பணிபுரிகிறோம்.
எங்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள சம்பளம் முறையாக வழங்குவது இல்லை. இதனை கேட்டதால் தற்போது தேர்தல் விதிகளை மீறி ஒப்பந்த முறையில் புதிதாக ஆட்களை எடுக்க உள்ளனர்.
வெளிப்படைத் தன்மையின்றி நடைபெற உள்ள ஒப்பந்த முறை நியனமத்தை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு குறைந்தபட்சம் சம்பளம் வழங்கி, இ.எஸ்.ஐ., பி.எப்., ஆகிய பணப்பலன்களை வழங்க வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என்றனர்.